கமலுடன் மோத விரும்பாத நயன்தாரா

கமல் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘விஸ்வரூபம் 2’ படம் வெளியாகும் அதே தினத்தில், நயன்தாராவின் திரைப்படம் வெளியாகவில்லை என்று படக்குழுவினர் அறிவித்திருக்கிறார்கள். #Nayanthara
கமலுடன் மோத விரும்பாத நயன்தாரா
Published on

நயன்தாரா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘கோலமாவு கோகிலா’ . நெல்சன் திலிப்குமார் இயக்கியிருக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். நயன்தாராவுடன் இப்படத்தில் யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன், அறந்தாங்கி நிஷா, தொலைக்காட்சி பிரபலம் ஜேக்குலின், நவீன் குமார், உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 

சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், கமலின் ‘விஸ்வரூபம் 2’ வெளியாகும் ஆகஸ்ட் 10-ஆம் தேதியில் இப்படத்தையும் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்திருந்தனர்.

தற்போது ஆகஸ்ட் 17ம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு விக்னேஷ் சிவன், சிவகார்த்திகேயன் ஆகியோர் பாடல் எழுதியுள்ளனர். #CoCo #KolamaavuKokila #Nayanthara

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com