இணையத்தில் வைரலாகும் நயன்தாரா பட பர்ஸ்ட் லுக்

தமிழில் முன்னணி ஹீரோயினாக வலம் வரும் நயன்தாராவின் அடுத்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
நயன்தாரா
நயன்தாரா
Published on

தமிழில் முன்னணி ஹீரோயினாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் தமிழ் படங்களில் மட்டும் கவனம் செலுத்தாமல், தெலுங்கு, மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். 

இவர் தற்போது மலையாளத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக 'லவ் ஆக்சன் டிராமா' படத்தில்  நடித்துள்ளார். இப்படத்தை தியான் ஸ்ரீனிவாசன் இயக்கியுள்ளார். இப்படத்தில் வில்லனாக சின்னத்துரை பிரபலம் பிரஜன் நடித்துள்ளார். 

இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. படத்தின் பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படம் விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. 

இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த படம் வரும் ஓணம் பண்டிகையின் போது திரைக்கு வரவுள்ளது. 

X

Maalai Malar
www.maalaimalar.com