நயன்தாராவுக்கு நெருக்கமான தோழியான தமன்னா

நயன்தாரா - தமன்னா இருவரும் சிரஞ்சீவியின் ‘சயீரா நரசிம்ம ரெட்டி’ படத்தில் இணைந்து நடிக்கும் நிலையில், இருவரும் மீண்டும் இணைந்து நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Nayanthara #Tamannaah
நயன்தாராவுக்கு நெருக்கமான தோழியான தமன்னா
Published on

நயன்தாரா சினிமாவில் யாருடனும் எளிதில் நட்பாகிவிட மாட்டார். முக்கியமாக சக நடிகைகள் என்றாலே அவருக்கு அலர்ஜி. எனவேதான் நயன்தாராவுக்கு நடிகைகளில் நெருக்கமான தோழி என்று யாரும் இல்லை. மோதலில் தொடங்கிய ஒரு பிரச்சினை நயன்தாராவையும், திரிஷாவையும் தோழிகளாக இணைத்தது.

இருவரையும் இணைத்து நடிக்க வைக்கும் அளவுக்கு வளர்ந்தது. பின்னர் அதில் சர்ச்சை ஏற்பட்டு திரிஷா நடிக்காமல் ஒதுங்கிவிட்டார். இதனால் அந்த படம் ஆரம்பநிலையிலேயே நிற்கிறது. இதற்கிடையில் நயன்தாராவுக்கு புதிய தோழியாக கிடைத்திருக்கிறார் தமன்னா. சிரஞ்சீவி நடிக்கும், ‘சைரா நரசிம்ம ரெட்டி’ தெலுங்கு படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் நயன்தாரா.

இந்த படத்தில் முக்கிய வேடத்தில் தமன்னா நடிக்கிறார். வரலாற்று பின்னணியில் உருவாகும் இதில் அமிதாப்பச்சனும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். நயன்தாராவுக்கும், தமன்னாவுக்கும் நட்பு மென்மையாக தொடர்வதை அடுத்து சிரஞ்சீவி அடுத்து நடிக்கும் புதிய படத்தில் இந்த இரண்டு ஹீரோயின்களும் இணைந்து நடிக்க உள்ளதாக பட தரப்பிலிருந்து தகவல் கசிகிறது. சிரஞ்சீவியின் 152-வது படமாக உருவாகும் இதை கொரட்டலா சிவா இயக்க இருக்கிறார். #Nayanthara #Tamannaah

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com