

இப்படத்துக்கு விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. 'அறம்' படத்தில் நடித்ததிற்காக நயன்தாராவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. பல சினிமா பிரபலங்களும், திரைப்பட விமர்சகர்களும், ரசிகர்களும் படத்தை பாராட்டி வருகின்றனர்.
இப்படத்தை மேலும் பிரபலமாக்க முதல் முறையாக, 'அறம்' திரையிடப்பட்டுள்ள சென்னை திரையரங்குகளுக்கு நேரடியாக சென்று வருகிறார் நயன்தாரா. சென்னை காசி திரையரங்கம் மற்றும் கமலா திரையரங்குகளுக்கு சென்று, படம் பார்த்தவர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறார்.