நாயே பேயே

சக்திவாசன் இயக்கத்தில் நடன இயக்குனர் தினேஷ் நடிப்பில் உருவாகும் ‘நாயே பேயே’ படத்தின் முன்னோட்டம்.
நாயே பேயே
Published on

கோபி கிருஷ்ணாவின் கட்டிங் ஒட்டிங் ஸ்டுடியோஸ் மற்றும் கலை தி ஆர்ட் புரொடக்ஷன்ஸ் டாக்டர். ரேவதி ரெங்கசாமி, கலையரசி சாத்தப்பன் இணைந்து தயாரிக்கும் படம் ‘நாயே பேயே’.

நடன இயக்குனர் தினேஷ் நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக ஐஸ்வர்யா நடிக்க, இவர்களுடன் ஆடுகளம் முருகதாஸ், ஷாயாஜி ஷிண்டே, ரோகேஷ், கிருஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு - நிரன் சந்தர், இசை - என்.ஆர்.ரகுநந்தன், கலை - சுப்பு அழகப்பன், படத்தொகுப்பு - கோபி கிருஷ்ணா, நிர்வாக தயாரிப்பாளர் - சக்கரத்தாழ்வார், ஆக்சன் - ஸ்டான்ட் ஜி.என், நடனம்  தினேஷ், தினா, இணை இயக்குனர் - வே.செந்தில்குமார், தயாரிப்பு மேற்பார்வை - அஸ்கர் அலி, விஜயகுமார், தயாரிப்பு - கோபி கிருஷ்ணா, கலையரசி சாத்தப்பன், டாக்டர். ரேவதி ரெங்கசாமி, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - சக்திவாசன்

இயக்குனர் சக்திவாசன் படம் பற்றி கூறியதாவது:-

‘‘நகரத்தில் வாழும் ஒரு துடிப்பான இளைஞன், மனம் போன போக்கில் வாழ்ந்து கொண்டிருக்கிறான். நிரந்தர வேலையில் இல்லாத அவன், அவ்வப்போது சமயோசிதமாக சிறு சிறு திருட்டுகளில் ஈடுபட்டு, அதில் கிடைக்கும் பணத்தில் நண்பர்களுடன் சந்தோஷமாக இருக்கிறான்.

இந்த நிலையில், அவன் ஒரு பெரிய திருட்டில் ஈடுபட்டு வாழ்க்கையில் ‘செட்டில்’ ஆக விரும்புகிறான். அவனுக்கு அந்த சந்தர்ப்பம் அமைந்ததா, அதில் அவன் வெற்றி பெற்றானா? என்பதே இந்த படத்தின் கதை என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com