டீசருக்கு நாள் குறித்த நரகாசூரன்

துருவங்கள் 16 படத்தை அடுத்து கார்த்திக் நரேன் இயக்கி வரும் ‘நரகாசூரன்’ படத்தின் டீசர் வெளியிடும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
டீசருக்கு நாள் குறித்த நரகாசூரன்
Published on
துருவங்கள் 16 படத்தின் வெற்றியை தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கி வரும் படம் ‘நரகாசூரன்’.  இதில் அரவிந்த் சாமி, ஸ்ரேயா, சந்தீப் கிஷன், ஆத்மிகா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்புதான் தொடங்கப்பட்டது.

தொடர்ந்து நடைபெற்ற இதன் படப்பிடிப்பு 41 நாட்களில் திட்டமிட்டபடி முடிவுற்றது. தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நரகாசூரன் படத்தின் டீசரை, நவம்பர் 25ம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்திருக்கின்றனர்.

இதன் படப்பிடிப்பு முழுக்க முழுக்க ஊட்டியில் நடைபெற்றிருக்கிறது. அடுத்தாண்டு கோடை விடுமுறைக்கு படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். கவுதம் மேனன் இப்படத்தை தயாரித்துள்ளார்.
X

Maalai Malar
www.maalaimalar.com