அம்மா கதாபாத்திரத்தில் நடிக்கும் நந்திதா

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளுள் ஒருவரான நந்திதா, அடுத்த படத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்தில் அம்மாவாக நடிக்க இருக்கிறார். #NanditaSweta
அம்மா கதாபாத்திரத்தில் நடிக்கும் நந்திதா
Published on

தமிழ் சினிமாவில் உள்ள நாயகிகள் கதைக்கும், கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்க விருப்பம் தெரிவிக்கின்றனர். அந்த வகையில் தற்போது பல நாயகிகள் தங்களது கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடித்து வருகின்றனர். 

அந்த வரிசையில் நந்திதா ஸ்வேதாவும் இணைந்திருக்கிறார். ‘நர்மதா’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில், நந்திதா ஒரு குழந்தைக்கு தாயாக நடிக்கிறார். இதுபற்றி படத்தின் தயாரிப்பாளரும், டைரக்டருமான கீதா ராஜ்புத் கூறியதாவது:-

“தாய்க்கும், மகனுக்கும் உள்ள பாசப்பிணைப்பை நெகிழ்ச்சியாக சொல்லும் படம், இது. இதில், கதையின் நாயகி நந்திதா ஸ்வேதா 7 வயது ஆண் குழந்தைக்கு தாயாக நடிக்கிறார். கதை நாயகனாக விஜய் வசந்த் நடிக்கிறார். கவுரவ வேடத்தில் நடிக்க முன்னணி கதாநாயகன் ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

படத்துக்காக, நாகர்கோவிலில் இயற்கை எழிலுடன் கூடிய திறந்தவெளி அரங்கம், பிரமாண்டமான முறையில் அமைக்கப்படுகிறது. இம்மாதம் இரண்டாவது வாரத்தில் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டு இருக்கிறோம்” என்றார்.

டைரக்டர்-தயாரிப்பாளர் கீதா ராஜ்புத், திருநங்கை பற்றிய ‘என்னை தேடிய நான்,’ ‘காதலை பேசும், ‘மயக்கம்,’ காது கேளாத மற்றும் வாய் பேசாத ஒரு பையனை மையப்படுத்திய ‘கபாலி’ ஆகிய 3 குறும் படங்களை தயாரித்து இயக்கியவர். பாலா டைரக்‌ஷனில் வெளிவந்த ‘தாரை தப்பட்டை’ படத்தில் உதவியாளராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. #NanditaSweta

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com