நாகேஷ் திரையரங்கம்

இசாக் இயக்கத்தில் ஆரி - ஆஷ்னா ஷவேரி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘நாகேஷ் திரையரங்கம்’ படத்தின் முன்னோட்டம்.
நாகேஷ் திரையரங்கம்
Published on

டிரான்ஸ் இண்டியா மீடியா நிறுவனத்தின் மூலம், ராஜேந்திர எம்.ராஜன் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘நாகேஷ் திரையரங்கம்’. 

ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட ‘அகடம்’ திரைப்படத்தை இயக்கி கின்னஸ் சாதனை படைத்த இசாக் இதை இயக்கியுள்ளார். இதில், ஆரி கதாநாயகனாக நடித்திருக்கிறார். அவருடைய ஜோடியாக ஆஸ்னா சவேரி நடித்திருக்கிறார். இவர்களுடன் காளி வெங்கட், மும்பை மாடல் மாசூம் சங்கர், மனோபாலா, சித்ரா லட்சுமணன் உள்பட பலர் நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரத்தில் லதாவும், சித்தாராவும் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு - நெளஷாத், இசை - ஸ்ரீ, படத்தொகுப்பு - தேவராஜ், கலை - ராமலிங்கம், ஸ்டண்ட் - ஸ்டன்னர் ஷாம், நடனம் - ராபர்ட், பாம்பே பாஸ்கர், இயக்கம் - இசாக்.

படம் பற்றி கூறிய அவர்,

“ தமிழ் சினிமாவில் இன்று வரை எண்ணற்ற திகில் படங்களும் பேய் படங்களும் வந்துள்ளன. என்றாலும், அவற்றில் இருந்து முற்றிலும் மாறுபட்ட விதத்தில் கதையும், திரைக்கதையும் கொண்ட படமாக இது இருக்கும். தியேட்டருக்குள் பேய் புகுந்து அட்டகாசம் செய்தால் என்ன நடக்கும் என்பதை நகைச்சுவை கலந்து சொல்லி இருக்கிறோம். புதிய கோணத்தில் எடுக்கப்பட்டுள்ள இந்த படம் திகில் பட பிரியர்களை மட்டுமல்ல, அனைத்து தரப்பினரையும் கவரும். இதற்கு தணிக்கை குழு 19 வெட்டுகளை கொடுத்து யு.ஏ. சான்றிதழ் வழங்கி உள்ளது” என்றார்.

‘நாகேஷ் திரையரங்கம்’ நாளை திரைக்கு வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com