நானும் சிங்கிள் தான்

ஜெயகுமார், புன்னகை பூ கீதா தயாரிப்பில் தினேஷ், தீப்தி திவேஸ் நடிப்பில் உருவாகி வரும் ‘நானும் சிங்கிள் தான்’ படத்தின் முன்னோட்டம்.
தினேஷ் - தீப்தி திவேஸ்
தினேஷ் - தீப்தி திவேஸ்
Published on

திரி இஸ் ஏ கம்பெனி என்ற பட நிறுவனம் மற்றும் ஜெயகுமார், புன்னகை பூ கீதா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் ‘நானும் சிங்கிள் தான்’. இந்த படத்தில் தினேஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக தீப்தி திவேஸ் நடித்துள்ளார். மற்றும் மொட்ட ராஜேந்திரன், மனோபாலா, செல்வேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் கோபி என்பவர் இயக்கியுள்ளார். இப்படம் குறித்து அவர் கூறும்போது, ‘சிங்கிள் என்ற வார்த்தை தற்போது மிகவும் கேட்சிங்கானது. அதன் அடிப்படையிலே ‘நானும் சிங்கிள் தான்’ என்ற டைட்டிலோடு களம் இறங்கி இருக்கிறோம். டைட்டில் போலவே கண்டெண்டிலும் தனிக் கவனம் செலுத்தி இருக்கிறோம்.

தமிழ்சினிமாவில் நடிகை நயன்தாராவின் காதல் மிகப்பிரபலம். அந்தக்காதலை அடிப்படையாக வைத்தே ஒரு கதையை தயார் செய்துள்ளோம். 

இந்த படத்தின் ஹீரோவின் லட்சியமே நயன்தாரா போல் ஒரு பெண்ணை திருமணம் செய்ய வேண்டும் என்பது தான். தமிழ் சினிமாவில் பெரிதாக கல்லா கட்டிய படமான அஜித்தின் பில்லா படத்தில் நயன்தாரா டாட்டூ குத்தி இருப்பார். அந்த டாட்டூ குத்திய நபராக இப்படத்தின் ஹீரோ வருகிறார். நயனுக்கு டாட்டூ குத்திய ஹீரோ தன் ஹார்ட்டைப் பறிகொடுக்க காதல் பேய்ப் பிடித்து திரிவது தான் கதை. இதற்குள் நயன் விக்னேஷ் சிவன் காதல் சமாச்சாரமும் இருக்கும் என்கிறார் இயக்குனர் கோபி. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com