சூர்யாவை தொடர்ந்து ஆர்யாவை அழைத்த சமுத்திரக்கனி

சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் - அஞ்சலி - அதுல்யா நடிப்பில் உருவாகி இருக்கும் `நாடோடிகள்-2' படத்தின் இரண்டாவது ஜஸ்ட் லுக் வீடியோவை நடிகர் ஆர்யா வெளியிட இருக்கிறார். #Naadodigal2 #SasiKumar
சூர்யாவை தொடர்ந்து ஆர்யாவை அழைத்த சமுத்திரக்கனி
Published on

சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் கடந்த 2009-ஆம் ஆண்டு வெளிவந்த `நாடோடிகள்' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று, வசூலிலும் சாதனை படைத்தது. இந்த நிலையில், `நாடோடிகள்' படத்தின் இரண்டாம் தற்போது உருவாகி இருக்கிறது.

படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் புரமோஷனுக்காக ஜஸ்ட் லுக் என்ற பெயரில் படக்குழு படத்தின் முக்கிய வசனங்களை வீடியோவாக வெளியிட்டு வருகிறது. சமீபத்தில் படத்தின் முதல் ஜஸ்ட் லுக் வீடியோவை நடிகர் சூர்யா வெளியிட்டிருந்தார். இந்த நிலையில், அடுத்த ஜஸ்ட் லுக்கை ஜூலை 9-ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடிகர் ஆர்யா வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் சார்பில் எஸ்.நந்தகோபால் தயாரிக்கும் இந்த படத்தில் சசிகுமார் - அஞ்சலி நாயகன், நாயகியாக நடிக்கிறார்கள். பரணி, அதுல்யா, எம்.எஸ்.பாஸ்கர், நமோ நாராயணன், ஞானசம்பந்தம், துளசி, ஸ்ரீரஞ்சனி, சூப்பர் சுப்புராயன், ராம்தாஸ், கோவிந்த மூர்த்தி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். ஒரு முக்கிய வேடத்தில் சமுத்திரகனியும் நடிக்கிறார். 

ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கும் இந்த படத்திற்கு ஏகாம்பரம் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார். படம் வருகிற ஆகஸ்ட் இறுதியில் திரைக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. #Naadodigal2 #Samuthirakani #Sasikumar 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com