பொங்கல் விருந்தளிக்கும் ‘நாச்சியார்’ படக்குழு

பாலா இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் - ஜோதிகா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘நாச்சியார்’ படக்குழு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று டிரைலர் விருந்தளிக்க முடிவு செய்துள்ளது.
பொங்கல் விருந்தளிக்கும் ‘நாச்சியார்’ படக்குழு
Published on

பி ஸ்டூடியோஸ் மூலம் பாலா தயாரித்து இயக்கியுள்ள படம் ‘நாச்சியார்’. 

ஜி.வி.பிரகாஷ் குமார் ஜோதிகா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தை ராக்லைன் வெங்கடேஷ், காவ்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜோதிகா இந்த படத்தில் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் போலீஸ் அதிகாரியாக வலம் வருகிறார். 

சமீபத்தில் வெளியான ‘நாச்சியார்’ படத்தின் டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துடன், சர்ச்சையிலும் சிக்கியது. டீசரின் முடிவில் ஜோதிகா பேசிய கெட்ட வார்த்தையால் டீசர் வைரலானது. இந்நிலையில், ‘நாச்சியார்’ படத்தின் டிரைலர் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதனைத் தொடர்ந்து படம் காதலர் தினத்தை முன்னிட்டு வருகிற பிப்ரவரி 9-ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. முன்னதாக இளையராஜா இசையில் பாடல்களும் விரைவில் வெளியாக இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com