

‘சின்ன பூவே மெல்ல பேசு’ என்ற படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் ராம்கி. இப்படத்தை இவரது நடிப்பில் வெளியான ‘செந்தூரப்பூவே’ படம் சூப்பர் ஹிட்டானது. இதையடுத்து இவரது நடிப்பில் ‘பறவைகள் பலவிதம்’, ‘இது எங்கள் நீதி’, ‘இணைந்த கைகள்’ என படங்கள வெளியாகி வெற்றி பெற்றது.
சில காலமாக சினிமாவை விட்டு விலகி இருந்த ராம்கி, ‘இங்கிலீஷ் படம்’ மூலம் ரீஎன்ட்ரீ கொடுத்தார். இப்படம் சமீபத்தில் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றது. இந்நிலையில், நடிகர் ராம்கிக்கு சென்னை மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கடந்த 13 ஆண்டுகளாக ரூ.1.17 லட்சம் சொத்து வரி செலுத்தாத காரணத்தால் ராம்கி வீட்டிற்கு சென்னை மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்கள்.