தாய்லாந்தில் படப்பிடிப்பை நிறைவு செய்த மிஸ்டர்.சந்திரமௌலி படக்குழு

திரு இயக்கத்தில் கார்த்திக் - கவுதம் கார்த்திக் - ரெஜினா கசாண்ட்ரா நடிப்பில் உருவாகி வரும் ‘மிஸ்டர் சந்திரமெளலி’ படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக படக்குழு அறிவித்துள்ளது. #MrChandramouli
தாய்லாந்தில் படப்பிடிப்பை நிறைவு செய்த மிஸ்டர்.சந்திரமௌலி படக்குழு
Published on

கிரியேட்டிவ் எண்டர்டெய்னர்ஸ் அன்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனம் சார்பில் தனஞ்செயன் தயாரிக்கும் படம் ‘மிஸ்டர் சந்திரமெளலி’.

கார்த்திக், அவருடைய மகன் கவுதம் கார்த்திக் முதல் முறையாக இணைந்து நடிக்கும் இந்த படத்தில் கவுதம் கார்த்திக் ஜோடியாக ரெஜினா கசாண்ட்ரா நடித்துள்ளார். வரலெட்சுமி சரத்குமார், இயக்குனர்கள் மகேந்திரன், அகத்தியன், காமெடி நடிகர் சதீஷ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். 

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், பாடல் காட்சிகளுக்காக படக்குழு கடந்த வாரம் தாய்லாந்து சென்றிருந்தது. இந்நிலையில், தாய்லாந்து படப்பிடிப்பும் முடிந்துவிட்டதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். 

தயாரிப்பாளர் சங்க வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்த பிறகு, இந்த படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் துவங்க இருக்கிறது. காதல் கலந்த த்ரில்லர் படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தை வருகிற மே மாதம் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். 

சாம்.சி.எஸ் இசையமைத்திருக்கும் இந்த படத்திற்கு, ரிச்சர்டு எம்.நாதன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார். #MrChandramouli

X

Maalai Malar
www.maalaimalar.com