பூஜையுடன் கிளம்பிய `மிஸ்டர்.சந்திரமௌலி'

திரு இயக்கத்தில் கார்த்திக் - கவுதம் கார்த்திக் - ரெஜினா- வரலட்சுமி நடிப்பில் உருவாக இருக்கும் `மிஸ்டர்.சந்திரமௌலி' படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியது.
பூஜையுடன் கிளம்பிய `மிஸ்டர்.சந்திரமௌலி'
Published on

கவுதமுடன் இணைந்து நடிக்க பல இயக்குனர்கள் கார்த்திக் சாரை இதற்கு முன்பு அணுகியுள்ளனர். ஆனால் அதற்கான சரியான கதை அமைந்தால் மட்டுமே நான் நடிப்பேன் என கார்த்திக் கூறிவந்த நிலையில், கார்த்திக், 'அனேகன்' படம் மூலம் புதுப்பொலிவுடன் களமிறங்கினார். தற்போது சூர்யாவுடன் `தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் நடித்து வருகிறார்.

தந்தை - மகன் பற்றிய சுவாரஸ்யமான கதையை கார்த்திக்கிடம் திரு சொன்ன பொழுது, அது அவருக்கு பிடித்து போக, இந்த படத்தில் நடிக்க உடனே சம்மதித்தார். கார்த்திக், கவுதம் கார்த்திக்கை தவிர இப்படத்தில் இயக்குனர் மஹேந்திரன், இயக்குனர் அகத்தியன், ரெஜினா கசாண்ட்ரா, வரலக்ஷ்மி, சந்தோஷ் பிரதாப், சதீஷ், ஜெகன், 'மைம்' கோபி, விஜி சந்திரசேகர், மனோபாலா உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனை்.

ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிப்பு செய்யும் இந்த படத்திற்கு சாம்.சி.எஸ். இசையமைக்கிறார்.

இன்று தொடங்கிய இப்படத்தின் படபிடப்பு சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட பல பகுதிகளில் ஒரே கட்டத்தில் நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com