The Conjuring: Last Rites

The Conjuring: Last Rites

தி கான்ஜுரிங் பிரான்சிசின் கடைசி திரைப்படமாக உருவாகியுள்ளது.
Published on
The Conjuring: Last Rites(3 / 5)

கதைக்களம்

இப்படம் உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட திரைப்படமாகும். பென்சில்வேனியாவில் ஒரு வீட்டில் ஸ்மெல் பேமிலி என்ற குடும்பம் வாழ்ந்து வருகிறது. அவர்கள் வீட்டில் அடுத்து அடுத்து அமானுஷ்யம் சம்பவங்கள் நடைப்பெறுகிறது. இதனை அக்கம் பக்கம் வீட்டாருக்கு யார் கூறினாலும் நம்ப மறுக்கின்றனர். இந்த அமானுஷ்யத்தில் இருந்து நமக்கு தீர்வு கிடைக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் பத்திரிக்கை மற்றும் மீடியாவின் உதவியை நாடுகின்றனர். சில வருடங்கள் கழித்து இந்த விஷயம் வாரென் தம்பதிக்கு தெரிய வருகிறது. அவர்கள் ம அந்த தம்பதிக்கு உதவி செய்ய முன் வருகின்றனர். உண்மையில் அந்த வீட்டில் அமானுஷ்யம் இருக்கிறதா என சோத்தித்து பார்க்க வருகின்றனர். இதற்கு அடுத்து என்ன ஆனது? உண்மையில் அமானுஷ்ய இருந்ததா? அமானுஷ்யத்தின் பின்னணி என்ன? எனப்தே படத்தின் மீதிக்கதை.

இயக்கம்

உண்மை கதையை தழுவி இயக்குநர் மைக்கேல் சாவ்ஸ் இப்படத்தை இயக்கியுள்ளார். படத்தின் ஆரம்பத்திலேயே நம்மை திகில் மோடிற்குள் கொண்டு செல்கின்றார்.படத்தின் பல இடங்களில் திக்கென தெறிக்கவிடும் ஸ்கேரி மொமெண்ட்ஸ் உடன் இயக்கியுள்ளார். பல இடங்களில் அது வொர்க் அவுட் ஆகியுள்ளது. படத்தின் மைய கதையான ஏடன் ஏமிலியை விட்டுவிட்டு வாரென் குடும்பத்தின் கதை, அவரது மகளின் காதல் மற்றும் காதலனின் கதையை காட்சிபடுத்தியதால் திரைக்கதையில் தொய்வு ஏற்படுகிறது.

நடிகர்கள்

படத்தில் நடித்த அனைத்து கதாப்பாத்திரமுமே அவர்களது வேலையை சிறப்பாக பிரதிபலித்துள்ளனர். 

இசை

பெஞ்சமினின் பின்னணி இசை மற்றும் சவுண்ட் மிக்ஸிங், எபெக்ட்ஸ் ஆகியவை திகில் காட்சிகளுக்கு வலுசேர்க்கின்றன.

ஒளிப்பதிவு

எலி பார்ன் ஒளிப்பதிவு அபாரம். பல காட்சிகளில் நம்மை பயம்புறுத்துகிறார்.

தயாரிப்பு

 Atomic Monster, New Line Cinema, and The Safran கம்பெனி ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது.

வீடியோக்கள்

X

Maalai Malar
www.maalaimalar.com