ஒன் மேன் -விமர்சனம்

ஒன் மேன் -விமர்சனம்

படத்தின் முடிவில் இடம்பெறும் மேக்கிங் காட்சிகள், இந்தப் படத்தை உருவாக்க சங்ககிரி ராஜ்குமார் எவ்வளவு கடினமாக உழைத்திருக்கிறார் என்பதை உணர்த்துகின்றன.
Published on: 
ஒன் மேன் -விமர்சனம்(2.5 / 5)

மொத்தத்தில், வழக்கமான சினிமா அனுபவத்தைத் தாண்டி ஒரே மனிதனின் அசாத்திய உழைப்பையும் திறமையையும் காட்டும் வித்தியாசமான முயற்சி ‘ஒன் மேன்’.

கதை

தனித்திறமை கொண்ட ஐந்து பேருக்கு விருது அறிவிக்கப்படுகிறது. அதை பெறச் செல்லும் வழியில் கார் பழுதாக, காட்டுக்குள் செல்லும் 5 பேரும் ஒரு மர்மமான சோதனைக்கூடத்தை கண்டுபிடிக்கின்றனர். அங்கு கிடைக்கும் செல்போன் மூலம், ஒரு பரிசோதனையை முடித்தால் 10 நாட்களுக்கு உலகில் வேறு எந்த உயிரினமும் இருக்காது என்ற அதிர்ச்சிகரமான தகவலை அறிகின்றனர். அதன் பிறகு நடக்கும் எதிர்பாராத சம்பவங்களே படத்தின் கதை.

சங்ககிரி ராஜ்குமார்

படத்தின் மிகப்பெரிய ஆச்சரியம் சங்ககிரி ராஜ்குமார். நடிப்பு, இயக்கம், தயாரிப்பு, ஒளிப்பதிவு, எடிட்டிங், இசை, சவுண்ட், மேக்கப், கிராபிக்ஸ் என 24-க்கும் மேற்பட்ட துறைகளின் பணிகளை ஒரே நபராக செய்து முடித்திருக்கிறார்.

அதிலும் ஒரே நடிகர் நூற்றுக்கணக்கான கதாபாத்திரங்களாக ஒரே பிரேமில் தோன்றும் காட்சிகள் வியக்க வைக்கின்றன. அமெரிக்காவில் படமாக்கப்பட்டது போன்ற பிரம்மாண்ட காட்சிகளும் தொழில்நுட்பமும் கவனம் ஈர்க்கின்றன.

படத்தின் முடிவில் இடம்பெறும் மேக்கிங் காட்சிகள், இந்தப் படத்தை உருவாக்க சங்ககிரி ராஜ்குமார் எவ்வளவு கடினமாக உழைத்திருக்கிறார் என்பதை உணர்த்துகின்றன. “இதை ஒரு மனிதரால் எப்படி முடிந்தது?” என்ற கேள்விக்கு படமே பதிலாக நிற்கிறது.

மொத்தத்தில், வழக்கமான சினிமா அனுபவத்தைத் தாண்டி ஒரே மனிதனின் அசாத்திய உழைப்பையும் திறமையையும் காட்டும் வித்தியாசமான முயற்சி ‘ஒன் மேன்’.

X

Maalai Malar
www.maalaimalar.com