Black Mail

Black Mail

Published on
Black Mail(2.5 / 5)

கதைக்களம்

தனியார் ஃபார்மசி கம்பனியில் டிரைவராக வேலைப்பார்த்து வருகிறார் ஜிவி பிரகாஷ். தேஜு அஸ்வினியை காதலித்து வருகிறார். ஒரு நாள் இவர் டெலிவரி செய்யப்போகும் போது இவரது வண்டியை ஒரு கும்பல் திருடிவிடுகின்றனர். அப்பொழுது தான் அந்த வண்டியில் 50 லட்ச மதிப்பில் உள்ள போதைப்பொருள் இருப்பது தெரிய வருகிறது. இதனால் ஜிவி பிரகாஷின் காதலியை கடத்தி வைத்துக் கொண்டு மிரட்டுகின்றனர். அந்த 50 லட்ச மதிப்புக்கொண்ட போதைப்பொருளை திருப்பி கொடுக்க வேண்டும் , இல்லை பணமாக திருப்பி கொடுக்க வேண்டும் என மிரட்டுகின்றனர்.

மறுபக்கம் தொழிலதிபரான ஸ்ரீகாந்தின் குழந்தையை கடந்த வில்லன் லிங்கா திட்டம் போடுகிறார். குழந்தை கடத்தினால் 50 லட்சம் பணம் கிடைக்கும் என ஜி.வி பிரகாஷ் அந்த செயலை செய்ய ஒப்புக் கொள்கிறார். இதற்கு அடுத்து என்ன ஆனது? ஜிவி குழந்தையை கடத்தினாரா? காதலியை காப்பாற்றினாரா? குழந்தையை கடத்த பின்னணி காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

நடிகர்கள்

ஜி.வி பிரகாஷ் அலட்டல் இல்லாத இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.காதலியை இழந்து தவிப்பது, குழந்தையை கடத்த போடும் ஸ்கேட்ச், குழந்தையை தேடி அலைவது, ஸ்ரீகாந்த்துடன் கெஞ்சுவது என படம் முழுக்க பார்வையாளர்களை கவர்கிறார்.

தேஜு அஸ்வினி கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளார்.வில்லன் லிங்காவால் மிரட்டப்படுகிற காட்சிகளில், குழந்தையை இழந்து தவிக்கிற காட்சிகளில், ஸ்ரீகாந்திடம் சில உண்மைகளை மறைக்கிற காட்சிகளில் பிந்து மாதவியின் எமோஷனல் வொர்க் அவுட் ஆகி இருக்கிறது.

ஜி.வி.பிரகாஷ் நண்பராக வரும் ரமேஷ் திலக், வில்லனாக வரும் லிங்கா, ஓனர் முத்துகுமார் ஆகியோரும் மனதில் நிற்கிறார்கள். குழந்தை அப்பாவாக வரும் ஸ்ரீகாந்த் அவரது அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

இயக்கம்

குழந்தை கடத்தலை மையமாக வைத்து இப்படத்தை இயக்கியுள்ளார் மு மாறன். திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்திருக்க வேண்டும். குறிப்பாக இரண்டாம் பாதி திரைக்கதை பலவீனமாக இருக்கிறது. குழந்தை மாறி மாறி வெவேறு இடத்திற்கு செல்வது பார்ப்பவர்களுக்கு சலிப்பை தட்டுகிறது.

இசை

சாம் சி.எஸ்- இன் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.

ஒளிப்பதிவு

கோகுல் பினாய் ஒளிப்பதிவு கதையோட்டத்திற்கு பெரிதும் உதவியுள்ளது.

தயாரிப்பு

தெய்வகனி அமல்ராஜ் இப்படத்தை தயாரித்துள்ளார்.

வீடியோக்கள்

X

Maalai Malar
www.maalaimalar.com