லவ் குருவாக மாறிய மொட்டை ராஜேந்திரன்

காமெடி நடிகராக வலம் வரும் மொட்டை ராஜேந்திரன் ‘நானும் சிங்கள் தான்’ படத்தில் லவ் குருவாக மாறி காதலர்களுக்கு ஐடியாக்களை கொடுத்துள்ளார்.
நானும் சிங்கள் தான் படத்தில் மொட்டை ராஜேந்திரன்
நானும் சிங்கள் தான் படத்தில் மொட்டை ராஜேந்திரன்
Published on

வில்லனாக அறிமுகமாகி தற்போது காமெடியில் கலக்கி வருபவர் மொட்டை ராஜேந்திரன். இவர் தற்போது ‘நானும் சிங்கள் தான்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் கதாநாயகனாக தினேஷும், கதாநாயகியாக தீப்த்தி ஷெட்டியும் நடித்துள்ளார்கள். புதுமுக இயக்குனர் ரா.கோபி இப்படத்தை இயக்கியுள்ளார்.

இதுவரை வில்லன், காமெடியனாக நடித்து வந்த மொட்டை ராஜேந்திரன் இப்படத்தில் ரொமாண்டிக் காமெடியனாக நடிக்கிறார். லண்டன் வாழ் தமிழனாக எப்.எம். ஸ்டேசனில் ஆர்.ஜே.வாக தனது கதாபாத்திரத்தில் கலக்கி இருக்கிறார். மிஸ்டர்.லவ் என்ற பெயரில்  காதலர்களுக்கு டிப்ஸ் கொடுத்து உதவும் லண்டன் லவ் குருவாக நடித்திருக்கிறார்.

காதலை சேர்த்து வைப்பது, காதல் தோல்வியில் விரத்தி அடைந்தவர்களுக்கு, முக்கியமாக சிங்கிளாக இருப்பவர்களை மிங்கிளாக மாற்ற ஐடியாக்களை கொடுக்கிறார் மொட்டை ராஜேந்திரன்.

மொட்டை ராஜேந்திரனின் இந்த கதாபாத்திரம் ரசிகர்களை நிச்சயம் கவரும் என்கிறார் இயக்குனர் ரா.கோபி.

X

Maalai Malar
www.maalaimalar.com