ஆஸ்கர் விருது விழா 2021 - ஆதிக்கம் செலுத்திய 5 திரைப்படங்கள்

உலகமே உற்று நோக்கிய 93-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது.
ஆஸ்கர் விருது
ஆஸ்கர் விருது
Published on

உலகளவில் திரைப்படத் துறையில் மிக உயரிய விருதாக கருதப்படுவது ஆஸ்கர் எனும் அகாடமி விருது. இவ்விருது விழா, வழக்கமாக பிப்ரவரி மாதம் நடத்தப்படும். ஆனால் இந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக, 93 வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா 2 மாதங்கள் தாமதமாக நடத்தப்படுகிறது.

இதில் கதை, வசனம், இயக்கம், இசை, நடிப்பு என 23 பிரிவுகளில் விருது வழங்கப்பட்டு வருகிறது. உலகமே உற்று நோக்கிய 93-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் இன்றி நடந்து வருகிறது. 

இதில் சோல், மங்க், சவுண்ட் ஆஃப் மெட்டல், பிளாக் பாட்டம், நோ மேட்லாண்ட் ஆகிய ஐந்து படங்கள் தலா இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது. சிறந்த பின்னணி இசை மற்றும் சிறந்த அனிமேஷன் திரைப்படம் ஆகிய விருதுகள் சோல் படத்துக்கு கிடைத்துள்ளன. சிறந்த படத்தொகுப்பு மற்றும் சிறந்த ஒலி அமைப்பு ஆகிய விருதுகளை சவுண்ட் ஆஃப் மெட்டல் திரைப்படம் வென்றுள்ளது.

சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு மற்றும் சிறந்த ஒளிப்பதிவு ஆகிய பிரிவுகளில் மங்க் திரைப்படம் விருது வென்றுள்ளது. சிறந்த ஒப்பனை மற்றும் ஆடை வடிவமைப்பு ஆகிய விருதுகள் பிளாக் பாட்டம் படத்திற்கு கிடைத்துள்ளன. சிறந்த படம் மற்றும் சிறந்த இயக்குனருக்கான விருது நோ மேட்லாண்ட் படத்துக்கு கிடைத்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com