திரிஷாவை புகழ்ந்த மோகினி இயக்குனர்

நடிகை திரிஷாவை வைத்து ‘மோகினி’ என்ற ஹாரர் படத்தை இயக்கி இருக்கும் ஆர்.மாதேஷ், திரிஷாவின் நடிப்பை பற்றி புகழ்ந்து பேசியிருக்கிறார்.
திரிஷாவை புகழ்ந்த மோகினி இயக்குனர்
Published on

திரிஷா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘மோகினி’. இப்படத்தை மாதேஷ் இயக்கியுள்ளார். இப்படம் குறித்து அவர் கூறும்போது, 

‘என்னுடய முந்தைய படங்களின் வரிசையில் தற்போது மிக பெரிய படைப்பாக உருவாகி உள்ள படம் மோகினி. இப்படத்தில் திரிஷா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். குறிப்பாக சண்டை காட்சிகளில் மிக சிறப்பாக நடித்துள்ளார். இப்படம் வெகு ஜனங்களிடம் எளிதாக சென்றடையும். மக்கள் எதிர் பார்க்கும் அனைத்துமே இப்படத்தில் உள்ளது. இப்படத்தில் கிட்டதட்ட 80% காட்சிகள் வெளிநாட்டில் படமாக்கபட்டுள்ளன. 

ஹாரர் பட வரிசைகளில் மிகவும் மாறுபட்டு உருவாக்கப்பட்டுள்ளது. "காதலன்" படத்தில் முக்காலா முக்காபுல்லா பாடலில் பிரபு தேவா தலை இல்லாமல் ஆடும் காட்சி முதல் இன்று பாகுபலி வரை விஷவல் எபக்ட்ஸ் மக்களை பிரம்மிக்க வைத்துள்ளது. அதே போன்று இப்படத்திலும் நிறைய விஷவல் எபக்ட்ஸ் காட்சிகள் உள்ளன. ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும் வகையில் படம் வந்துள்ளது. இப்படம் உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டே உருவாகியுள்ளது. படத்தை பார்க்கும் அனைவரும் தங்களோடு இணைத்து கொள்ள முடியும். 

படத்தல் பூர்ணிமா பாக்யராஜ், யோகி பாபு, சுவாமி நாதன், ஆர்த்தி கணேஷ் மற்றும் பன்னீர் பூஷ்பம் சுரஷே் போன்ற அனைவரும் சிறப்பாக நடித்துள்ளார்கள். படத்தில் உள்ள அனைத்து பாடல்களும் சிறப்பாக வந்துள்ளன. டிரைலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதே போன்று படத்திற்கும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கின்றேன்.

X

Maalai Malar
www.maalaimalar.com