மோகனா

எல்.எஸ்.கே.மூவிஸ் வழங்கும் மோரா பிக்சர்ஸ் தயாரிக்கும் படம் ‘மோகனா’. பேயை பின்னணியாக கொண்டு இது உருவாகிறது. இதில் மொட்டை ராஜேந்திரன், பவர்ஸ்டார் சீனிவாசன், கல்யாணி நாயர், அஸ்மித்தா, கிங்காங், உமா, மோரா, மும்பை ஸ்ரீனுஸ்ரீ ஹரிஸ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
மோகனா
Published on

கதை, திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு-ஆர்.ஏ.ஆனந்த். படப்பிடிப்பு அனுபவம் பற்றி மொட்டை ராஜேந்திரன், பவர் ஸ்டார் சீனிவாசன் பேசும் போது....

“இந்தப்படத்திற்கான இறுதிகட்ட படப்பிடிப்பு காஞ்சீபுரத்தை அடுத்த மருதம் கிராமத்தில் ஒரு பாழடைந்த பங்களாவில் நடந்தது. தொடர்ந்து முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட வேண்டியிருந்ததால், இரவு அங்கேயே தங்கினோம். இரவு 12 மணிக்கு தூங்கிக்கொண்டிருந்த எங்கள் இருவரையும் ஒரு அழகான பெண் எழுப்பியது. நாங்கள் தூக்க கலக்கத்தில் எழுந்து அந்த அழகான பெண் பின்னாடியே மொட்டை மாடிக்கு சென்றோம். மாடிக்கு போய் கண் விழித்த போது நாங்கள் மொட்டைமாடியின் சுவரின் மீது ஏறி நின்றிருப்பது தெரிய வந்தது. அப்போது அந்த பெண் இந்த மாடியிலிருந்து குதியுங்கள் என்று பயமுறுத்தினாள். அலறிய நாங்கள் இருவரும் பதட்டத்துடன் மாடியிலிருந்து கீழே இறங்கி ஓடி வந்தோம்.

இந்த சம்பவத்தால் அன்று இரவே அந்த ஊரையும் பாழடைந்த பங்களாவையும் விட்டு விட்டு அவுட்டோர் யூனிட் வண்டியிலும், வேனிலும், காரிலும் ஏறி தப்பி வந்தோம். இந்த நிகழ்ச்சியை இன்று வரை எங்களால் மறக்க முடிய வில்லை” என்றார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com