மிக மிக அவசரம்

சுரேஷ்காமாட்சி இயக்கத்தில் பெண் போலீசை பெருமைப்படுத்தும் படமாக உருவாகியிருக்கும் ‘மிக மிக அவசரம்’ படத்தின் முன்னோட்டம்.
மிக மிக அவசரம்
Published on

ஸ்ரீப்ரியங்கா நாயகியாக நடித்துள்ளார். அரீஷ்குமார் கதாநாயகனாகவும், இயக்குநர் சீமான் காவல் துறை உயரதிகாரியாகவும் நடித்துள்ளனர். முத்துராமன், இயக்குநர் ஈ ராமதாஸ், அரவிந்த், லிங்கா, சாரதி, இயக்குநர் சரவண சக்தி, வெற்றிக்குமரன், வி கே சுந்தர், குணசீலன், மாஸ்டர் சாமுண்டி ஆகியோர் நடித்துள்ளனர்.

கதை, வசனம் - இயக்குனர் கே.பி.ஜெகன், ஒளிப்பதிவு - பாலபரணி, கலை - பாலமுருகன், தயாரிப்பு, இயக்கம் - சுரேஷ்காமாட்சி. இவர், இந்த படத்தின் மூலம் முதல்முறையாக இயக்குனர் ஆகி இருக்கிறார்.

படம் பற்றி கூறிய சுரேஷ் காமாட்சி...

காக்கிச் சட்டையைக் கழட்டும் போது மனசையும் சேர்த்து கழட்டிப் போடுபவர்களின் எண்ணிக்கை கொஞ்சம்தான்.

காவலர்களின் வலியை அறிந்து ‘மிக மிக அவசரம்‘ படத்தின் கதையை உருவாக்கி இருக்கிறோம். காவலர்களுக்கும் மனிதாபிமானம், மண்மீதான பற்று, மக்கள் போராட்டம் இவைகளில் அக்கறை உண்டு என்பதை படத்தில் வரும் காட்சிகளும் வசனங்களும் அழகாக பேசியிருக்கிறது.

அதிலும் பெண் காவலர்கள் இந்தப் படத்தைப் பார்த்தால் ஒருசொட்டு கண்ணீருடன் இந்த படம் உண்மையை பேசியிருக்கிறது என அங்கீகரிப்பார்கள். காவல் துறையில் பணியாற்றும் சகோதரிகளுக்கு இந்தப் படத்தை சமர்ப்பணம் செய்ய இருக்கிறோம்” என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com