எம்.ஜி.ஆர்.பாண்டியன்

ஆதம் பாவா இயக்கத்தில் இயக்குனர் அமீர் நடிக்கும் ‘எம்.ஜி.ஆர்.பாண்டியன்’ படத்தின் முன்னோட்டம்.
எம்.ஜி.ஆர்.பாண்டியன்
Published on

இதில், இயக்குனர் அமீர் கதாநாயகனாக நடிக்கிறார். ‘555’ சாந்தினி நாயகியாக நடிக்கிறார். நடிகர்கள் ஆனந்தராஜ், பொன்வண்ணன், கஞ்சா கருப்பு, இமான் அண்ணாச்சி, மகாநதி சங்கர், ராஜ் கபூர், கசாலி உள்பட பலர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு - தேவராஜ், பாடல்கள் - வைரமுத்து, பா.விஜய், இசை - வித்யாசாகர்.

படம் குறித்து தயாரிப்பாளர், இயக்குனர் ஆதம் பாவா கூறும்போது...

“எம்.ஜி.ஆர். என்ற ஒரு மாபெரும் அரசியல் தலைவரின் பெயரையும், பாண்டியன் என்ற சூப்பர் ஸ்டாரின் திரைப்பட பெயரையும் இணைத்து, எம்.ஜி.ஆர். பாண்டியன் என்று பெயர்சூட்டி இருக்கிறோம்.

இந்த படம் அமைதிப் படைக்குப்பிறகு மீண்டும் ஒரு பென்ச் மார்க் அரசியல் படமாக இருக்கும். எம்.ஜி. ஆர். நூற்றாண்டை சிறப்பாக கொண்டாடிவரும் இந்த வேளையில் ஒரு உண்மையான எம்.ஜி.ஆர் ரசிகனை இந்த படத்தில் காணலாம். அமீரின் முழு ஒத்துழைப்பில் படம் சிறப்பாக வந்துள்ளது.

ஏற்கனவே நான்கு கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், அமீர் ‘வட சென்னை’, ‘சந்தனத்தேவன்’ படங்களிலும் பிசியாக இருப்பதால் இரண்டிற்கும் இடையில் தேதிகள் பாதிக்காமல் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளோம்.

X

Maalai Malar
www.maalaimalar.com