ஆண்கள் மட்டும் பங்கேற்கும் `மகளிர் மட்டும்' போட்டி

`மகளிர் மட்டும்' என்றாலே பெண்கள் மட்டும் பங்கேற்கும்படியாக இருக்கும். ஆனால் ஆண்கள் மட்டும் பங்கேற்கும் `மகளிர் மட்டும்' போட்டி ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்கள் மட்டும் பங்கேற்கும் `மகளிர் மட்டும்' போட்டி
Published on

இதில், `மகளிர் மட்டும்' வருகிற செப்டம்பர் 15-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தை குற்றம் கடிதல் படத்தை இயக்கிய தேசிய விருது இயக்குநர் பிரம்மா இயக்கியிருக்கிறார். இதில் ஜோதிகா, சரண்யா பொன்வண்ணன், ஊர்வசி, பானுப்ரியா, நாசர், லிவிங்ஸ்டன், ஷோபனா கார்த்திகேயன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் மற்றும் கிரிஷ் பிக்சர்ஸ் இணைந்த தயாரித்திருக்கிறது.

படம் ரிலீசுக்கு தயாரிக்கிற நிலையில், படத்தை விளம்பரப்படுத்தும் விதமாக `மகளிர் மட்டும்' படக்குழு போட்டி ஒன்றை நடத்தியிருக்கிறது. பொதுவாக `மகளிர் மட்டும்' என்றாலே பெண்கள் மட்டும் பங்கேற்பார்கள். ஆனால் இதில் ஆண்கள் மட்டும் தான் பங்கேற்க முடியும்.

`நான் கொண்டாடும் பெண்' என்ற தலைப்பில் நீங்கள் கொண்டாடும் பெண்மணியைப் பற்றி அவர்களை நீங்கள் ஏன் கொண்டாடுகிறீர்கள் என்ற நான்கு வரிகளும் அந்த பெண்ணுடனான உங்கள் செஃபியையும் அனுப்புங்கள். அவர் உங்கள் அம்மாவாகவோ, அக்காவாகவோ, தங்கையாகவோ, மகளாகவோ, மனைவியாகவோ, காதலியாகவோ - அல்லது வேறு யாராகவும் இருக்கலாம். உங்களுடன் சேர்ந்து அந்த பெண்மணியை நாங்களும் கொண்டாடுகிறோம், ஒரு பட்டுப்புடவையுடன்...

வாட்ஸ்அப் - +91 7395993200 இமெயில் - AANGALMATTUM2017@GMAIL.COM

உங்களது செஃபி மற்றும் 4 வரிகளை இந்த எண்ணிற்கு அல்லது மெயிலுக்கு அனுப்ப வேண்டும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com