அரசியல்வாதியை திருமணம் செய்யும் தனுஷ் பட நடிகை

நடிகர் தனுஷுடன் பட்டாஸ் படத்தில் நடித்த நடிகை மெஹ்ரீன் பிர்சாடா, அரசியல்வாதியை திருமணம் செய்ய உள்ளார்.
மெஹ்ரீன் பிர்சாடா, பவ்யா பிஷ்னோய்
மெஹ்ரீன் பிர்சாடா, பவ்யா பிஷ்னோய்
Published on

சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான ’நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் மெஹ்ரீன் பிர்சாடா. இதையடுத்து விஜய் தேவரகொண்டாவின் நோட்டா படத்தில் நடித்தார். பின்னர் ‘பட்டாஸ்’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

இந்நிலையில், நடிகை மெஹ்ரீன் பிர்சாடா திருமணத்துக்கு தயாராகி வருகிறார். இவர் அரியானா மாநில முன்னாள் முதல்வர் பஜன் லாலின் பேரன் பவ்யா பிஷ்னோய்யை காதல் திருமணம் செய்ய உள்ளார். இவர்களது திருமணம் வருகிற மார்ச் 13-ந் தேதி ஜெய்ப்பூரில் உள்ள அரண்மனையில் நடைபெற உள்ளது. பவ்யா பிஷ்னோயும் அரசியலில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com