நடிகை மேக்னா நாயுடு ரகசிய திருமணம்

தமிழ், தெலுங்க படங்களில் நடித்து பிரபலமான நடிகை மேக்னா நாயுடு டென்னிஸ் வீரரை காதலித்து ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக கூறியுள்ளார். #MeghnaNaidu
நடிகை மேக்னா நாயுடு ரகசிய திருமணம்
Published on

தமிழில் சிம்புவுடன் சரவணா, சரத்குமாருடன் வைத்தீஸ்வரன் மற்றும் ஜாம்பவான், வீராசாமி, வாடா உள்பட பல படங்களில் நடித்தவர் மேக்னா நாயுடு. தனுசின் குட்டி, கார்த்தியின் சிறுத்தை படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார். இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். சில வருடங்களாக அவர் சினிமாவில் நடிக்கவில்லை.

இந்த நிலையில் மேக்னா நாயுடு, டென்னிஸ் வீரரை ரகசிய திருமணம் செய்துகொண்டதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

“எனது தந்தை டென்னிஸ் பயிற்சியாளர். அவர் மூலம் போர்ச்சுகீசிய டென்னிஸ் வீரர் லூயிஸ் அறிமுகமானார். என்னை விட அவர் பத்து வயது மூத்தவர். சமூக வலைத்தளம் மூலம் எங்கள் நட்பு தொடர்ந்தது. பின்னர் அது காதலாக மலர்ந்தது. கடந்த 2016 டிசம்பர் 25-ந் தேதி நாங்கள் இருவரும் மும்பையில் இந்து முறைப்படி ரகசிய திருமணம் செய்துகொண்டோம்.

எளிமையாக இந்த திருமணம் நடந்தது. அடுத்த வருடம் கிறிஸ்தவ முறைப்படியும் எங்கள் திருமணம் நடக்கும். தேனிலவு இன்னும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. சமீபத்தில் எனது கணவரிடம் திருமணத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் போகிறேன் என்றேன். இதைத்தொடர்ந்து எங்கள் திருமணத்தை இப்போது எல்லோருக்கும் தெரியப்படுத்துகிறேன்.”

இவ்வாறு மேக்னா நாயுடு கூறினார். #MeghnaNaidu

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com