விக்ரமின் `ஸ்கெட்ச்' படத்திற்காக பிரமாண்டமாக உருவான பாடல் காட்சி

விஜய் சந்தர் இயக்கத்தில் விக்ரம் - தமன்னா நடிப்பில் வெளியாகி இருக்கும் `ஸ்கெட்ச்' படத்தில் ஒரு பாடல் பிரமாண்டமாக படமாக்கப்பட்டிருக்கிறது.
விக்ரமின் `ஸ்கெட்ச்' படத்திற்காக பிரமாண்டமாக உருவான பாடல் காட்சி
Published on

விக்ரம் - தமன்னா இணைந்து நடிக்கும் இப்படத்தை விஜய் சந்தர் இயக்கினார். வடசென்னை பின்னணியில் ஆக்ஷன் கலந்த ஸ்டைலிஷ் படமாக உருவாகியிருக்கும் இப்படத்தில் சூரி, ஆர்.கே.சுரேஷ், அருள்தாஸ், மலையாள நடிகர் ஹரீஷ், ஸ்ரீமன், மதுமிதா,  விஷ்வாந்த், பாபுராஜா, வினோத், வேலராமமூர்த்தி, சாரிகா ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் முக்கிய வேடத்தில் பிரியங்கா நடிக்கிறார்.

எஸ்.எஸ்.தமன் இசையில் கனவே கனவே என்ற ஒரு பாடல் மட்டும் வெளியாகி இருக்கிறது. விரைவில் இசை வெளியீட்டு விழா மிக பிரமாண்டமாக நடைபெற உள்ளது.

`ஸ்கெட்ச்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. இதில் படத்திற்காக சென்னையில் மிக பிரமாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டது. அதிலும் `அச்சி புச்சி ஸ்கெட்சு' என்ற பாடல் காட்சியில் விக்ரம் பங்கேற்க உடன் 150 டான்சர்ஸ், 1500-க்கும் மேற்பட்ட துணை நடிகர்கள் பங்கேற்க தஸ்தாகீர் நடன அமைப்பில் படமாக்கப்பட்டது.

வட சென்னையை பின்னணியாக கொண்டு உருவாகி வரும் இப்படத்தின் டீசர் விரைவில் வெளியாக உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com