அங்கிளாக மாறிய மம்முட்டி

மலையாளத்தில் பல படங்களில் பிசியாக நடித்து வரும் மெகா ஸ்டார் மம்முட்டி, தற்போது அங்கிளாக மாறியிருக்கிறார்.
அங்கிளாக மாறிய மம்முட்டி
Published on
பிரபல மலையாள நடிகர் மம்முட்டி. இவர் தமிழில் ‘அழகன்’, ‘தளபதி’, ‘மக்கள் ஆட்சி’, ‘மறுமலர்ச்சி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் சூப்பர் ஹிட் படங்களில் நடித்தாலும், மலையாளப் படங்களில் நடிக்கவே அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.

இவரது நடிப்பில் இந்த வருடம் மட்டுமே 4 படங்கள் வெளியாகி உள்ளது. மேலும் 4 படங்கள் இந்த வருடமே வெளியாக காத்துக் கொண்டிருக்கிறது. இன்னும் 3 படங்கள் அடுத்த வருடம் வெளியாக இருக்கிறது. இப்படி பல படங்களில் பிசியாக நடித்து வரும் மம்முட்டி, அடுத்ததாக புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

இந்த புதிய படத்திற்கு ‘அங்கிள்’ என்று பெயர் வைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஜாய் மேத்திவ் எழுதியுள்ள கதையை கிரிஷ் தாமோதர் இயக்க இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் 15ம் தேதி தொடங்க இருக்கிறது. மம்முட்டி, அடுத்தடுத்து பல படங்களில் ஒப்பந்தமாகி வருவது ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.
X

Maalai Malar
www.maalaimalar.com