மலையாள நடிகையை டாவடிக்கும் கயல் சந்திரன்

ராம் பாலா இயக்கத்தில் கயல் சந்திரன் நடிக்கவிருக்கும் `டாவு' படத்தில் மலையாள நடிகை ஒருவரை டாவு அடிக்க இருக்கிறார்.
மலையாள நடிகையை டாவடிக்கும் கயல் சந்திரன்
Published on

இந்நிலையில் கயல் சந்திரன் அடுத்ததாக தில்லுக்கு துட்டு படத்தை இயக்கிய ராம் பாலா இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். டாவு என தலைப்பு வைக்கப்பட்டுள்ள அந்த படத்தில் முனிஷ் காந்த், லிவிங்ஸ்டன், ஊர்வசி, மனோபாலா, கல்யாணி நடராஜன், பாவா லக்ஷ்மணன் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

சந்தோஷ் தயாநிதி இசையமைக்கும் இந்த படத்தை 2 எம்.பி மூவி பஃப்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

தீபக் குமார்பதி ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்தில் கதாநாயகியாக மலையாள நடிகை ரெபா மோனிகா ஜான் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் மலையாளத்தில் நிவின் பாலி ஜோடியாக ஜேகோபின்டெ ஸ்வர்கராஜ்யம் படத்தின் மூலம் அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கதாநாயகி தேர்வு குறித்து ராம்பாலா கூறியபோது,

" இந்தக் கதைக்கு மிக அழகான கதாநாயகி தேவை. அதற்கு ரெபேக்கா மோனிகா ஜான் மிக மிக பொருத்தமாக இருப்பார். தமிழ் ரசிகர்களுக்கு அவரை நிச்சயம் பிடிக்கும்" என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com