தனுஷுக்கு வில்லனாகும் மலையாள நடிகர்

பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவாக இருக்கும் `மாரி-2' படத்தில் தனுஷுக்கு வில்லனாக நடிக்க மலையாள நடிகர் ஒருவர் ஒப்பந்தமாகி இருக்கிறார்.
தனுஷுக்கு வில்லனாகும் மலையாள நடிகர்
Published on

பாலாஜி மோகன் இயக்கிய இந்த படத்தில் தனுஷ், விஜய் யேசுதாஸ், காஜல் அகர்வால் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். `மாரி' படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, சமீபத்தில் மாரி-2 படத்திற்கான வேலைகளை பாலாஜி மோகன் தொடங்கினார்.

தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கும் இந்த படத்தில் தனுஷுக்கு வில்லனாக நடிக்க மலையாள சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவரான டோவினோ தாமஸ் நடிப்பதாக பாலாஜி மோகன் அவரது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்திருக்கிறார்.

ஏற்கனவே டோவினோ தாமஸ் தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் பேனரில் `தரங்கம்' மற்றும் `மரடோனா' படங்களில் நடித்து வருகிறார். இதில் டோமினிக் அருண் இயக்கி வரும் `தரங்கம்' படம் வருகிற 29-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதுதவிர டோவினோ பி.ஆர்.விஜயலட்சுமி இயக்கத்தில் தமிழ், மலையாளம் என இருமொழிகளில் உருவாகி இருக்கும் `அபியும் அனுவும்' படத்திலும் நடித்திருக்கிறார்.

இந்நிலையில் `மாரி-2' படத்தில் தனுஷுக்கு வில்லனாக நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. `மாரி-2' படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com