நிவின் பாலியின் வரலாற்று படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் சூப்பர் ஸ்டார்

ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கத்தில் நிவின் பாலி - பிரியா ஆனந்த் நடிப்பில் உருவாகி வரும் `காயம்குளம் கொச்சுண்ணி' வாழ்க்கை வரலாறு படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். #KaayamkulamKochunni #NivinPauly #Mohanlal
நிவின் பாலியின் வரலாற்று படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் சூப்பர் ஸ்டார்
Published on

ஸ்ரீகோகுலம் மூவிஸ் சார்பில் கோகுலம் கோபாலன் தயாரிக்கும் படம் ‘காயம்குளம் கொச்சுண்ணி’.

‘காயம்குளம் கொச்சுண்ணி’, 19-ம் நூற்றாண்டில் கேரளாவில் உள்ள காயம்குளம் பகுதியில் வாழ்ந்த ஒருவரை பற்றிய படம். இவர் ராபின்ஹுட் போல செல்வந்தர்களிடம் இருந்து பணம், பொருள்களை பறித்து நலிந்த மக்களுக்கு வழங்கி வந்துள்ளார். 

1859-ல் கொச்சுண்ணி போலீசாரால் கைது செய்யப்பட்டு பூஜப்புரா ஜெயிலில் அடைக்கப்பட்டு அங்கேயே இயற்கை எய்தினார். இவருடைய வாழ்க்கையில் இடம் பெற்ற சம்பவங்களை மையமாக வைத்து இப்படம் உருவாகிறது. இதில் கொச்சுண்ணியாக நிவின் பாலி நடிக்க மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக நிவின் பாலி அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

ப்ரியா ஆனந்த் கொச்சுண்ணியின் மனைவியாக நடிக்கிறார். பாபி, சஞ்சய் ஆகியோர் இந்த படத்திற்கு திரைக்கதை எழுத ‘36 வயதினிலே’ படத்தை இயக்கிய ரோ‌ஷன் ஆன்ட்ரூஸ் இந்த படத்தை இயக்குகிறார். 

பினோத் பிரதான் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்குசு கோபி சுந்தர் இசையமைக்கிறார். #KaayamkulamKochunni #NivinPauly #Mohanlal

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com