

இவர் அங்கமாலி டைரிஸ் என்ற படத்தில் லிச்சி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் அறிமுக விழா ஒரு மலையாள டி.வி.யில் ஒளிபரப்பானது. அப்போது அவரிடம் நீங்கள் மோகன் லாலுடன் ஜோடியாக நடித்து விட்டீர்கள். நடிகர் மம்முட்டி மற்றும் அவரது மகன் துல்கர்சல்மான் ஆகியோருடன் நடிக்கும் வாய்ப்பு வந்தால் யாருடன் நடிப்பீர்கள்? என்று கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு நடிகை அன்னா ராஜன் பதில் அளிக்கும் போது துல்கர்சல்மான் கதா நாயகனாக நடித்தால் மம்முட்டி தந்தை வேடத்தில் நடிப்பாரா? அல்லது மம்முட்டி கதாநாயகனாக நடித்தால் துல்கர்சல்மான் தந்தையாக நடிப்பாரா? என்று சிரித்துக்கொண்டே பதில் அளித்தார்.
இதைதொடர்ந்து நடிகை அன்னாராஜனுக்கு மம்முட்டி ரசிகர்களும், துல்கர்சல்மான் ரசிகர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பேஸ்-புக் உள்பட சமூக வலைதளங்கள் மூலம் அவருக்கு எதிரான கருத்துக்களை அவர்கள் பதிவிட்டு வருகிறார்கள்.