கோவிலில் நடந்த பிரபல நடிகரின் திருமணம்.... நீண்டநாள் காதலியை கரம்பிடித்தார்

கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை கடைபிடித்து பிரபல மலையாள நடிகர் தனது திருமணத்தை எளிமையாக நடத்தி உள்ளார்.
கோகுலன், தன்யா
கோகுலன், தன்யா
Published on

கொரோனா ஊரடங்கில் அரசின் சமூக விலகல் விதிமுறைகளை கடைபிடித்து குறைந்த எண்ணிக்கையில் உறவினர்களை வைத்து நடிகர்கள் திருமணங்கள் நடந்துள்ளன. ரஜினியின் பேட்ட படத்தில் நடித்துள்ள மணிகண்டன். கோலி சோடா 2 படத்தில் வில்லனாக வந்த மலையாள நடிகர் செம்பன் வினோத் ஜோஸ், தெலுங்கு நடிகர் நிதின், கன்னட நடிகர் நிகில் ஆகியோருக்கு ஊரடங்கில் திருமணம் நடந்துள்ளது. 

இந்த நிலையில் பிரபல மலையாள நடிகர் கோகுலன் திருமணமும் ஊரடங்கில் நடந்தது. இவர் 2011ல் ஜெயராம் கதாநாயகனாக நடித்து திரைக்கு வந்த குடும்பஸ்ரீ டிராவல்ஸ் படம் மூலம் அறிமுகமானார். மம்முட்டியுடன் உண்டா படத்தில் போலீஸ்காரராக நடித்து பிரபலமானார். ஆமென், சப்தம்ஸ்ரீ தஸ்கரகா, பாதேமாறி, வாரிக்குழியிலே கோலபதக்கம் உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். 

கோகுலன் தனது நீண்ட நாள் காதலியான தன்யாவை திருமணம் செய்துகொண்டுள்ளார். இவர்கள் திருமணம் எர்ணாகுளத்தில் உள்ள இரவிசித்ரா சிவன் கோவிலில் நடந்தது. கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை கடைபிடித்து திருமணத்தை நடத்தினர். நெருங்கிய உறவினர்கள் சிலர் மட்டுமே கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com