அரசியலை கிண்டல் செய்யும் படத்தில் மாளவிகா நாயர்

`குக்கூ' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை மாளவிகா நாயர் அடுத்ததாக அரசியலை கிண்டல் செய்யும் காமெடி படத்தில் நடித்துள்ளார். #ArasiyallaIdhellamSaadharnamappa #MalavikaNair
அரசியலை கிண்டல் செய்யும் படத்தில் மாளவிகா நாயர்
Published on

`குக்கூ' படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் மாளவிகா நாயர். அந்த படத்தில் பார்வையற்றவராக சிறப்பான நடிப்பை தந்த மாளவிகா அதன் பிறகு தமிழில் நடிக்கவில்லை.

சாவித்திரியின் வாழ்க்கை வரலாறாக உருவான `நடிகையர் திலகம்' படத்தில் ஜெமினி கணேசனின் முதல் மனைவியாக நடித்து இருந்தார். தற்போது அவினாஷ் ஹரிஹரன் இயக்கத்தில் `ராஜதந்திரம்' பட புகழ் வீரா ஜோடியாக `அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா' என்ற படத்தில் நடித்துள்ளார். 

"இது பல்வேறு கதாபாத்திரங்களை உள்ளடக்கிய முழு நீள காமெடி திரைப்படம். பாண்டிச்சேரியை சேர்ந்த ஒரு புகைப்படக் கலைஞர், சென்னையை சேர்ந்த திருமண ஒருங்கிணைப்பாளர் மற்றும் மும்பையை சேர்ந்த அடியாள் ஆகியோர் தங்கள் தொழிலில் மீண்டும் மேலே வரும் நோக்கில் இருக்கும் போது, ஒரு அரசியல்வாதியால் ஏற்படும் குழப்பத்தால் என்ன ஆகிறார்கள் என்பதே படத்தின் கதையாக நகர்கிறது" 

முழுக்க முழுக்க அரசியலை கிண்டல் செய்து காமெடி படமாக உருவாகியிருக்கும் இந்த படத்தில் பசுபதி, ரோபோ ஷங்கர் மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். ஜலந்தர் வாசன் ஒளிப்பதிவு செய்ய, மேட்லி ப்ளூஸ் இந்த படத்துக்கு இசையமைத்திருக்கிறார்.

மாளவிகாவுக்கு ஓவியத்தின் மீது ஆர்வம் அதிகம். எதிர்காலத்தில் பைலட் ஆவது தான் அவரது லட்சியமாம். அவருக்கு பிடித்த நடிகர்கள் கமல், தனுஷ். பிடித்த நடிகைகள் ஸ்ரீதேவி, சுருதிஹாசன் என்று மாளவிகா கூறினார். #ArasiyallaIdhellamSaadharnamappa #MalavikaNair

X

Maalai Malar
www.maalaimalar.com