மஜித் மஜிதியின் பியாண்ட் தி க்லௌட்ஸ் ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஈரானிய இயக்குநர் மஜித் மஜிதி இயக்கத்தில் உணர்ச்சிகளை பேசும் பியாண்ட் தி க்லௌட்ஸ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. #BeyondTheClouds
மஜித் மஜிதியின் பியாண்ட் தி க்லௌட்ஸ் ரிலீஸ் தேதி அறிவிப்பு
Published on

தாக்கத்தை ஏற்படுத்தும் கதைகளை தன் படைப்புகளால் பேச வைத்து பலகோடி ரசிகர்களைத் தன்வசம் வைத்திருக்கும் ஈரானிய இயக்குநர் மஜித் மஜீதி, 'பியாண்ட் தி க்லௌட்ஸ்' என்ற இந்தி திரைப்படத்தை தற்போது இயக்கியுள்ளார். ஈரானிய மொழியில் இல்லாமல் மஜித் மஜீதி இயக்கும் முதல் படம் இது. ரசிகர்களிடையே பெரிதும் எதிர்பார்க்கப்படும் இப்படம் உலகம் முழுவதும் வருகிற 

ஏப்ரல் 20-ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

ஆஸ்கர் நாயகன் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க, புதுமுக நடிகர் இஷான் கத்தார், மலையாள நடிகை மாளவிகா மோகனன் நடித்துள்ள இப்படம் கலாச்சாரம் மற்றும் மொழிகளின் எல்லையைக் கடந்து, சக மனிதர்களை நேசிக்கும் உணர்வுகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.

மஜித் மஜீதி இயக்கத்தில் உருவான 'பியாண்ட் தி க்லௌட்ஸ்' படத்தின் இசை அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இயக்குநர் மஜித் மஜீதி, நடிகர்கள் இஷான் கட்டார், மாளவிகா மோகனன், கவுதம் கோஷ், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், தயாரிப்பாளர்கள் ஷரீன் மன்திரி கேடியா, கிஷோர் அரோரா மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சுஜாய் குட்டி ஆகியோர் முன்னிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி படத்தின் மீதுள்ள ஆர்வத்தை தூண்டியது. 

கலாச்சாரம் மற்றும் மொழிகளின் எல்லையைக் கடந்து, சக மனிதர்களை எப்படி நேசிக்கவேண்டும் என பல சீன்களை கண்முன் நிறுத்தி ரசிகர்கள் மத்தியில் இந்த ட்ரெய்லர் வெகுவாக கவர்ந்தது. உணர்வுகளை இசை மொழியால் வருடும் துள்ளல் மெலடிகளுக்கு செவி கொடுக்கும் வகையில் ரஹ்மானின் இசை அமைந்துள்ளது. #BeyondTheClouds

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com