ரசிகரின் கேள்விக்கு பதில் சொல்ல மறுத்த மகிமா

தமிழில் பல படங்களில் நடித்து பிரபலமான நடிகை மகிமா நம்பியார், ரசிகரின் கேள்விக்கு பதில் சொல்ல மறுத்திருக்கிறார்.
நடிகை மகிமா நம்பியார்
நடிகை மகிமா நம்பியார்
Published on

தமிழில் பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை மகிமா நம்பியார். தேசிய ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே அடைந்து கிடக்கும் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் எண்ணத்தில், தன் சமூக வலைத்தளத்தில் நேரலையில் தோன்றி, ரசிகர்கள் கேட்ட எல்லா கேள்விக்கும் முகம் சுளிக்காமல் பதிலளித்தார்.

வரிசையாக பதிலளித்து வந்த அவரிடம் ஒரு ரசிகர், 'உங்கள் வயசு என்னன்னு வெளிப்படையா சொல்ல முடியுமா மகிமா ? என்று கேட்டார். அதுவரை ஜாலியாக பதிலளித்துக் கொண்டிருந்த மகிமா,  ஹலோ . . .  ஆண்கள் கிட்ட அவங்க வருமானத்தை பற்றியும், பெண்கள் கிட்ட அவங்க வயசு பற்றியும் கேட்க கூடாதுன்னு உங்களுக்கு தெரியாதா ? இதுக்கு நான் பதில் சொல்லமாட்டேன் என்றார். பிறகு வழக்கம் போல் சில கேள்விகளுக்கு பதிலளித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com