சீன் போடும் பெண்ணை காதலிக்கும் மகேஷ்

அங்காடித்தெரு மூலம் பிரபலமான நடிகர் மகேஷ், தற்போது உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகும் படத்தில் சீன் போடும் பெண்ணை காதலிக்க இருக்கிறார்.
சீன் போடும் பெண்ணை காதலிக்கும் மகேஷ்
Published on

அங்காடித் தெரு படம் மூலம் புகழ் பெற்றவர் நடிகர் மகேஷ். இவர் தற்போது புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த படத்திற்கு ‘என் காதலி சீன் போடுறா’ என்று வித்தியாசமான தலைப்பு வைத்திருக்கிறார்கள். இதில் அவருக்கு ஜோடியாக லாலு என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். இவர்களுடன் ஆடுகளம் நரேன், மனோபாலா, விஜய் டிவி.கோகுல், டாக்டர் சரவணன் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

சங்கர் மூவீஸ் என்ற பட நிறுவனம் சார்பாக ஜோசப் பேபி தயாரிக்கிறார்கள். அம்ரீஷ் இசையமைக்கிறார். ராமகிருஷ்ணன் நடித்துள்ள டீக்கடை பெஞ்ச் படத்தை இயக்கிய ராம் ஷேவா இப்படத்தை இயக்குகிறார்.

இப்படம் பற்றி இயக்குனர் ராம்சேவா கூறும்போது, ‘இன்றைய சமூகத்தில் எல்லோருமே புத்திசாலிகள் தான். ஆனால் அவர்களை சாமார்த்தியமாக ஏமாற்றத் தெரிந்த அது புத்திசாலிகளும் அவர்களுக்குள்ளேயே கலந்து இருப்பதும் உண்மையே. இப்படி நடந்த உண்மை சம்பவங்களை மையப்படுத்தி கதை உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்திற்கு பிறகு எந்த குடும்பத்தை சேர்ந்தவர்களும் ஏமாறாமல் இருந்தால் நாங்கள் எடுத்த முயற்சிக்கு வெற்றி கிடைத்ததாக மகிழ்வோம். படப்பிடிப்பு சென்னை, பாண்டி, பொள்ளாச்சி, ஆனமலை போன்ற இடங்களில் தொடர்ந்து நடைபெற உள்ளது’ என்றார் இயக்குனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com