முதல்வராகும் தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு

`ஸ்பைடர்' படத்தை தொடர்ந்து மகேஷ் பாபு அடுத்ததாக நடிக்க உள்ள புதிய படத்தில் முதல்வர் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
முதல்வராகும் தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு
Published on

இந்த படத்தை முடித்து பிறகு, அடுத்ததாக கோரதாலா சிவா இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் மகேஷ் பாபு நடிக்க இருக்கிறார். பாரத் அனே நேனு என பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தில் மகேஷ் பாபு, முதல்வராக நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. அந்த படத்தின் முதற்கட்ட பணிகள் விரைவில் தொடங்க இருக்கிறது.

இதற்கு முன்னதாக ஷங்கர் இயக்கத்தில் அர்ஜுன் `முதல்வன்' படத்தில் முதல்வராக நடித்திருந்தார். பின்னர் `முதல்வன்' படத்தின் இந்தி ரீமேக்கான `நாயக்' படத்தில் அணில் கபூர் முதல்வராக நடித்தார். கடந்த 2010-ல் வெளியான `லீடர்' படத்தில் ராணா முதல்வராக நடித்திருந்த நிலையில், மகேஷ் பாபு முதல்வர் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க இருப்பதாக வெளியான தகவல் அவரது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com