கார்த்திகாவுக்கு அம்மா ஆன மதுபாலா

முன்னாள் நடிகை ராதாவின் மகள் கார்த்திகாவுக்கு அம்மாவாக மதுபாலா நடிக்கிறார். இது குறித்து மேலும் விரிவாக பார்ப்போம்...
கார்த்திகாவுக்கு அம்மா ஆன மதுபாலா
Published on

மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த்சாமி நடித்த ‘ரோஜா’ படத்தில் நாயகியாக வந்தவர் மதுபாலா. அதன் பிறகு ‘ஜென்டில்மேன்’, ‘வானமே எல்லை’, ‘மிஸ்டர் ரோமியோ’ உள்பட பல படங்களில் நடித்தார். திருமணத்துக்கு பிறகு சிறிய வேடங்களில் நடித்து வந்தார்.

இப்போது மதுபாலா இந்தி டி.வி. தொடரில் அம்மா வேடத்தில் நடிக்கிறார். ‘பாகுபலி’க்கு கதை எழுதிய ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் கதையில் உருவாகும் இந்தி தொடர் இது. முன்னாள் நடிகை ராதாவின் மகள் கார்த்திகா நாயகியாக நடிக்கிறார். அவருக்கு தேவசேனா வேடம். தொடரில் கார்த்திகாவின் அம்மாவாக மதுபாலா நடிக்கிறார்.

இதில்,பாகுபலியில் ரம்யா கிருஷ்ணன் நடித்த சிவகாமி வேடம் போல மதுபாலாவுக்கும் முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரம் என்று கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com