பாபி சிம்ஹா படத்தில் மதுபாலா - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஜே.பி.ஆர் மற்றும் ஷாம் சூர்யா இயக்கத்தில் பாபி சிம்ஹா நடிப்பில் உருவாக இருக்கும் ‘அக்னி தேவ்’ படத்தில் நடிகை மதுபாலா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #AgniDev #MadhooBala
பாபி சிம்ஹா படத்தில் மதுபாலா - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
Published on

பாபி சிம்ஹா நடிப்பில் கடந்த ஆண்டு ‘கருப்பன்’, ‘திருட்டு பயலே 2’ என இரண்டு படங்கள் வெளியாகிய நிலையில், அவர் தற்போது ஹரி இயக்கத்தில் ‘சாமி ஸ்கொயர்’ படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். 

இந்த படம் விரைவில் ரிலீசாக இருக்கும் நிலையில், பாபி சிம்ஹாவின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியாகியது. ‘அக்னி தேவ்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை ஜே.பி.ஆர் மற்றும் ஷாம் சூர்யா இயக்கவுள்ளளனர். இந்த படத்தின் பூஜை சமீபத்தில் கோயம்புத்து நடந்த நிலையில், விரைவில் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. 

இந்த நிலையில், இந்த படத்தில் நடிகை மதுபாலாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மதுபாலா கடைசியாக தமிழில் துல்கர் சல்மானின் `வாயை மூடி பேசவும்' படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

நடிகர் சதீஷும் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் பணியாற்றவிருக்கும் மற்ற கலைஞர்கள் குறித்த விவரம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #AgniDev #MadhooBala

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com