ஐஸ்வர்யா ராய் படத்தில் இருந்து விலகிய மாதவன்

அதுல் மஞ்ரேக்கர் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராய் நடிக்கும் இந்தி படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க மாதவன் மறுத்துவிட்டார். காரணம் குறித்து மாதவன் விளக்கம் அளித்துள்ளார்.
ஐஸ்வர்யா ராய் படத்தில் இருந்து விலகிய மாதவன்
Published on
‘இறுதிச்சுற்று’ படத்திற்குப் பிறகு மாதவனுக்கு தமிழ், இந்தி மொழிகளில் பல பட வாய்ப்புகள் வந்த வண்னம் உள்ளது. இவரது நடிப்பில் உருவான ‘விக்ரம் வேதா’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இதில் மாதவனுடன் விஜய் சேதுபதி, வரலட்சுமி சரத்குமார், கதிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்தியில் அதுல் மஞ்ரேகர் இயக்கத்தில் உருவாக இருக்கும் ‘பேன்னி கான்’ படத்தில் ஐஸ்வர்யா ராய்க்கு ஜோடியாக மாதவன் நடிப்பதாக இருந்தது. மாதவனுக்கு கதை பிடித்திருந்தாலும், கால்ஷீட் பிரச்சனை காரணம் அப்படத்தில் நடிக்க முடிய வில்லை. இதுபற்றி கூறியுள்ள அவர், ‘பேனிகான்’ படத்தின் கதை பிடித்திருக்கிறது. ஆனால் கால்ஷீட் கொடுக்க தேதி இல்லை. படக்குழுவுக்கு வாழ்த்துக்கள்’ என்று தெரிவித்துள்ளார்.

தற்போது மாதவனுக்கு பதிலாக ஐஸ்வர்யாராய் ஜோடியாக ராஜ்குமார்ராவ் என்ற இளம் நடிகர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com