10 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் ஐஸ்வர்யாராய் - மாதவன்

10 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஐஸ்வர்யாராய் - மாதவன் மீண்டும் இணைந்து நடிக்கவிருக்கின்றனர்.
10 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் ஐஸ்வர்யாராய் - மாதவன்
Published on: 

இந்தி பட இயக்குனர் அதில் மஞ்சுரேகர் இயக்கத்தில் தயாராகும் படம் ‘பேனிகான்’.

இதில் அனில்கபூர், ஐஸ்வர்யாராய் உள்பட பலர் நடிக்கிறார்கள். இந்த படத்தில் ஐஸ்வர்யாராய் ஜோடியாக நடிக்க வேறு நடிகர்களிடம் பேசப்பட்டது அக்‌ஷய் ஓப்ராயை நடிக்க கேட்டனர். அவரும் நடிக்கவில்லை.

இதையடுத்து, ஐஸ்வர்யாராய் ஜோடியாக மாதவன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் ‘பேனிகான்’ படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். இந்த படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது.

2007-ம் ஆண்டு மணிரத்னம் இயக்கிய ‘குரு’ படத்தில் ஐஸ்வர்யாராயும், மாதவனும் இணைந்து நடித்தனர். இப்போது மீண்டும் ஜோடி சேருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com