ராஜமவுலி படத்திற்காக வீட்டில் இருந்து வேலை பார்க்கும் மதன் கார்க்கி

ராஜமவுலி இயக்கத்தில் உருவாகும் ’ஆர்.ஆர்.ஆர்’ படத்திற்காக பாடலாசிரியர் மதன் கார்க்கி வீட்டில் இருந்தபடியே வேலை பார்ப்பதாக கூறியுள்ளார்.
ராஜமவுலி, மதன் கார்க்கி
ராஜமவுலி, மதன் கார்க்கி
Published on

பாகுபலி படத்தை தொடர்ந்து ராஜமவுலி தற்போது தெலுங்கின் முன்னணி கதாநாயகர்களான ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இருவரையும் வைத்து ’ஆர்.ஆர்.ஆர்’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். டிவிவி தானய்யா தயாரிக்கும் இந்த படம் சுமார் ரூ. 350 கோடியில் உருவாகி வருகிறது. மேலும் அஜய் தேவ்கன், சமுத்திரகனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 

விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா பீதி காரணமாக முடங்கி உள்ளது. இதனால் பின்னணி வேலைகளில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக படத்தின் டப்பிங் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதற்காக வீட்டில் இருந்தபடியே வேலை செய்வதாக பாடலாசிரியர் மதன் கார்க்கி தெரிவித்துள்ளார்.

சமூக இடைவெளியை கடைபிடிக்கும் விதமாக இயக்குனர் ராஜமவுலி, இசையமைப்பாளர் கீரவாணி மற்றும் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். ஆகியோருடன் வீடியோ கான்பெரன்ஸிங் மூலம் உரையாடுவது போன்ற புகைப்படத்தை மதன் கார்க்கி தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com