தெலுங்கில் தனது முதல் பாடலை எழுதிய மதன் கார்க்கி

தமிழில் பன்முகத் திறமைகளை கொண்ட பாடலாசிரியர் மதன் கார்க்கி முதல்முறையாக தெலுங்கில் பாடல் ஒன்றை எழுதியிருக்கிறார்.
தெலுங்கில் தனது முதல் பாடலை எழுதிய மதன் கார்க்கி
Published on

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடிப்பில் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகி வரும் `ஸ்பைடர்' படத்தின் தெலுங்கு பதிப்பில் மதன் கார்க்கி ஒரு பாடலை எழுதியிருக்கிறார்.

அதேநேரத்தில் `ஸ்பைடர்' படத்தின் தமிழ் பதிப்பில் மதன் கார்க்கி எழுத்தில் ``பூம் பூம்" என்ற பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றிருக்கிறது.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் மகேஷ் பாபுவை தமிழ்பட நாயகனாக அறிமுகம் செய்யும் பிரமாண்ட விழா வருகிற செப்டம்பர் 9-ந் தேதி சென்னையில் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து படம் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு வருகிற செப்டம்பர் 27-ஆம் தேதி வெளியாக உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com