இஸ்ரோ விஞ்ஞானியாக நடிக்கும் மாதவன்

விக்ரம் வேதா படத்தை தொடர்ந்து மாதவன் இணைய தொடரில் நடித்து வந்த நிலையில், அடுத்ததாக பிரபல இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கைப் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Madhavan #NambiNarayanan
இஸ்ரோ விஞ்ஞானியாக நடிக்கும் மாதவன்
Published on

விக்ரம் வேதா படத்தை தொடர்ந்து மாதவன் அடுத்ததாக இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கைப் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 

சமீபத்தில் சயீப் அலி கானுடன் இந்தி படமொன்றில் நடிக்க இருந்த மாதவன் தோள்பட்டை காயம் காரணமாக அந்த படத்தில் இருந்து வெளியேறினார். அந்த காயத்திற்காக மாதவனுக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்ட மாதவன் விரைவில் தனது அடுத்த படங்களில் நடிக்க தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில், மாதவன் அடுத்ததாக இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கைப் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. அந்த தகவலை மாதவன் உறுதி செய்திருக்கிறார். மூன்று மொழிகளில் உருவாகும் இந்த படத்தை ஆனந்த் மகாதேவன் என்பவர் இயக்க இருக்கிறார். 

இந்த படம் நம்பி நாராயணனின் பிரபல புத்தகமான ரெடி டூ ஃபயர்: ஹவ் இந்தியா அண்ட் ஐ சர்வைவ்டு த இஸ்ரோ ஸ்பை புத்தகத்தை தழுவி உருவாக இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. 

சமீபத்தில் மாதவன் ப்ரெத் என்ற இணை தொடரில் நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த தொடர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. #Madhavan #NambiNarayanan

X

Maalai Malar
www.maalaimalar.com