மாயோன்

அருண்மொழி மாணிக்கம் தயாரிப்பில் கிஷோர் இயக்கத்தில் சிபிராஜ் நடிப்பில் உருவாகி வரும் மாயோன் படத்தின் முன்னோட்டம்.
மாயோன் படத்தின் போஸ்டர்
மாயோன் படத்தின் போஸ்டர்
Published on

டபுள் மீனீங் புரடொக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘மாயோன்’. இப்படத்தில் சிபிராஜ், தன்யா ரவிச்சந்திரன், கே.எஸ்.ரவிக்குமார், ராதாரவி மற்றும் பல முன்னணி திரை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

டபுள் மீனீங் புரடொக்‌ஷன்ஸ் சார்பில் இப்படத்தை தயாரித்து, திரைக்கதை எழுதி இருக்கிறார் அருண்மொழி மாணிக்கம். கிஷோர் இயக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. 

மாயோன் படத்தில் சிபிராஜ் - தன்யா

விரைவில் இப்படத்தின் டிரைலர், இசை மற்றும் திரை வெளியீட்டு தேதியை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருக்கிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com