மாரி 2-வில் இணைந்த முக்கிய பிரபலம்

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருக்கும் ‘மாரி 2’ படத்தில் சாய் பல்லவியை தொடர்ந்து மேலும் ஒரு முக்கிய பிரபலம் இப்படத்தில் இணைந்துள்ளார்.
மாரி 2-வில் இணைந்த முக்கிய பிரபலம்
Published on
பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘மாரி’ படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இதன் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகத்தை எடுக்க இருக்கிறார் பாலாஜி மோகன். இப்படத்தை தனுஷ், தனது வுண்டர்பார் நிறுவனம் மூலம் தயாரிக்க இருக்கிறார்.

இதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இதில் தனுஷ்க்கு ஜோடியாக சாய் பல்லவி ஒப்பந்தம் ஆகியுள்ளார். வில்லனாக டோவினோ தாமஸ் நடிக்க இருக்கிறார். இப்படத்தின் இசையமைப்பாளர் மற்றும் இதர கதாபாத்திரங்கள் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இரண்டாவது லீட் ரோலாக நடிக்க கிருஷ்ணா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த அறிவிப்பை இயக்குனர் பாலாஜி மோகன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். கிருஷ்ணாவின் கதாபாத்திரம், தனுஷுக்கு வில்லனா, நண்பனா, என்று சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
X

Maalai Malar
www.maalaimalar.com