ஹவுஸ் ஓனர் படத்தில் கிஷோர் ஜோடியான பிரபல நடிகையின் மகள்

லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கி வரும் ஹவுஸ் ஓனர் படத்தில் பசங்க கிஷோருக்கு ஜோடியாக பிரபல நடிகை விஜி சந்திரசேகரின் மகள் லவ்லின் நடித்து வருகிறார். #HouseOwner #Kishore
ஹவுஸ் ஓனர் படத்தில் கிஷோர் ஜோடியான பிரபல நடிகையின் மகள்
Published on

நடிகர், இயக்குநர் என பன்முக திறமைகளை கொண்ட லக்ஷ்மி ராமகிருஷ்ணன் அசோக் செல்வன் - ஐஸ்வர்யா ராஜேஷை வைத்து ஹவுஸ் ஓனர் என்ற படத்தை இயக்குவதாக அறிவித்தார். 

இந்த நிலையில், பசங்க படத்தில் நடித்த கிஷோர் மற்றும் நடிகை விஜி சந்திரசேகரின் மகள் லவ்லினை வைத்து ஹவுஸ் ஓனர் என்ற தலைப்பில் புதிய படமொன்றை இயக்கி வருகிறார். படத்தில் ஆடுகளம் கிஷோர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 

சென்னை வெள்ளத்தின் போது நடந்த ஒரு காதலை மையப்படுத்தி தீவிரமான காதல் கதையாக இந்த படத்தை உருவாக்குகிறார். படத்தில் பாடல்கள் கிடையாது. படம் குறித்து லக்ஷ்மி ராமகிருஷ்ணன் பேசும் போது,

" ஆரம்பத்தில், அசோக் செல்வன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரை வைத்து இதே 'ஹவுஸ் ஓனர்' என்ற தலைப்பில் ஒரு படத்தை எடுக்கும் யோசனை எனக்கு இருந்தது. ஆனால் அந்த நேரத்தில் முதல் டிராஃப்ட் மட்டுமே தயாராக இருந்ததால், அது தொடங்கப்படவில்லை. இதற்கிடையில், நடிகர்கள் அவர்களின் கடமைகளில் பிஸியாகி விட்டனர், மேலும் அவர்கள் தற்போதைய படங்களை முடித்து விட்டு தான் திரும்ப வருவார்கள். இது தவிர, என் தொலைக்காட்சி நிகழ்ச்சியான 'சொல்வதெல்லாம் உண்மை'யை அடிப்படையாகக் கொண்ட ஒரு ஸ்கிரிப்டை 'ப்ளூ இன்க்' என்ற தலைப்பில் எழுதி வைத்திருந்தேன். ஜூன் 10ஆம் தேதி தொடங்க வேண்டிய படப்பிடிப்பு, ரியாலிட்டி ஷோ தற்காலிக தடை காரணமாக, முன்னோக்கி செல்ல தயக்கமாக இருந்தது. நாங்கள் `ஹவுஸ் ஓனர்' படத்தை ஆரம்பித்தோம் " என்றார்.

இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில், அடுத்ததாக ஒரே கட்டமாக இரண்டாவது கட்ட படப்பிடிப்பை செப்டம்பருக்குள் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. கிருஷ்ணா சேகர் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு பிரேம் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார். #HouseOwner #Kishore #Lovelyn 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com