லோகேஷ் கனகராஜ் படத்தை இந்தியில் ரீமேக் செய்யும் சந்தோஷ் சிவன்

இந்தியில் ரீமேக்காகும் லோகேஷ் கனகராஜின் சூப்பர்ஹிட் படத்தை, பிரபல ஒளிப்பதிவாளரான சந்தோஷ் சிவன் இயக்க உள்ளார்.
லோகேஷ் கனகராஜ், சந்தோஷ் சிவன்
லோகேஷ் கனகராஜ், சந்தோஷ் சிவன்
Published on

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘மாநகரம்’. இந்தப் படத்தில், சந்தீப் கி‌ஷன், ஸ்ரீ, ரெஜினா, சார்லி ஆகியோர் நடித்திருந்தனர். ஆக்‌‌ஷன் திரில்லர் படமான இதற்கு, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி படமும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இப்படம் விரைவில் இந்தியில் ரீமேக் ஆக உள்ளது. இதில் அஜய் தேவ்கன் நடிக்கிறார்.

இந்நிலையில், லோகேஷ் கனகராஜின் முதல் படமான மாநகரமும் இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளது. இப்படத்தை பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான சந்தோஷ் சிவன் இயக்க உள்ளார். விஜய்யின் ‘புலி’, விக்ரம் நடித்த ‘சாமி 2’ போன்ற படங்களை தயாரித்த ஷிபு தமீன்ஸ் மாநகரம் படத்தின் இந்தி ரீமேக்கை தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இரண்டு படங்களும் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு உள்ளன. இவர் அடுத்ததாக இயக்கி உள்ள மாஸ்டர் படம் விரைவில் ரிலீசாக உள்ளது. இதை தொடர்ந்து கமலின் 232-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com