

மணிரத்னத்தினம் உதவி இயக்குநராக பணியாற்றிய மிலண்ட் ராவ் இயக்கியிருக்கும் இந்த படத்தில் சித்தார்த் ஜோடியாக ஆண்ட்ரியா ஜெரோமியா நடித்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் இப்படம் வருகிற நவம்பர் 3-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. தமிழில் `அவள்' என்ற பெயரிலும், தெலுங்கில் `கிருஹம்' என்ற பெயரிலும், இந்தியில் `தி ஹவுஸ் நெக்ஸ்ட் டோர்' என்ற பெயரிலும் இப்படம் வெளியாகிறது.
வியாகாம் 18 மோஷன் பிக்சர்ஸ் மற்றும் சித்தார்த்தின் ஏடாகி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.